Wednesday, June 27, 2007

அன்பு மலர்களின் சோலை இது




அன்பை வெளிப் படுத்தக் கூடிய ஒரு பாடல்

சத்தான வரிகளாக இல்லையென்றாலும் சந்தத்தோடு
பொருந்தக்கூடிய வரிகள்

இளையராஜாவின் அற்புதமான மெட்டில் அம்மா பாடிய பாடல்

இந்த பாடலோடு தொடர்புடைய ஒரு சம்பவம்

இரண்டாயிரமாவது ஆண்டில் வேலை தேடி பெங்களுரில் (அப்போது பெங்களுர் தான்)
சுற்றி கொண்டிருந்த போது Browsing centers தான் பொழுதுபோக்கு மையங்கள்.
கோரமங்கலா விலே ஒரு Browsing center ல் thenisai.com பற்றி அறிந்து அதில் சென்று
இளையராஜா FM ஐ க்ளிக்கினேன். காதில் தேனாய் பாய்ந்தது இந்த பாடல்

நம் மொழி அவ்வளவாக பேசப்படாத ஒரு ஊரில், விரக்தியான மனநிலையில்,
எதிர்பாராத வேளையில் அற்புதமான பாடலை கேட்கும் போது ஏற்படும் சுகம் அலாதியானது

நீங்களும் கொஞ்சம் கேட்டு பாருங்கள்


அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்ட கோலம் இது
அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்ட கோலம் இது
சொந்தங்களே பந்தங்களே
சொந்தங்களே பந்தங்களே
சொர்க்கம் இதுவென்று
சொல்லி மகிழ்கின்ற
அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்ட கோலம் இது

கண்ணில் தெரியுது அன்பின் எல்லை
காணும் கனவுக்கு எல்லை இல்லை
மண்ணில் நிலைக்கின்ற காலம் வரை
மங்கலம் பொங்கிட என்ன குறை
கண்மணியே.....சிறு பொன்விளக்கே
முழு நிலவாய் புது மலராய்
முழு நிலவாய் புது மலராய்
உன்னில் இருந்து இவ்வையத்தில் வாழ்வேன்

அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்ட கோலம் இது
சொந்தங்களே பந்தங்களே
சொர்க்கம் இதுவென்று
சொல்லி மகிழ்கின்ற
அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்ட கோலம் இது

அந்தியின் சந்திப்பு நித்தம் நித்தம்
அன்பு வழங்கிடும் முத்தம் முத்தம்
இந்த பொழுது எனக்கினிமை
இருந்து மகிழ்வது உன் கடமை
வாழும் வரை வாழ்ந்திருப்பேன்
வாழ்பவரை வாழ்த்திச் செல்வேன்
வாழ்பவரை வாழ்த்திச் செல்வேன்
நெஞ்சம் நிறைவோடு வாழ்த்துகிறேன்

அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்ட கோலம் இது
சொந்தங்களே பந்தங்களே
சொந்தங்களே பந்தங்களே
சொர்க்கம் இதுவென்று
சொல்லி மகிழ்கின்ற
அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்ட கோலம் இது
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

படம்: கண்ணுக்கு மையெழுது
இசை: இளையராஜா
வெளியான ஆண்டு: 1986

AnbuMalar.mp3









free web hit counter image

Thursday, June 14, 2007

அச்சமில்லை அச்சமில்லை

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
துச்சமாக எண்ணிநம்மை தூறு செய்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!

பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!

கச்சணிந்த கொங்கைமாதர் கண்கள்வீசு போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
நச்சைவாயிலே கொணர்ந்து நண்பமூட்டு போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!

பச்சையூ னியைந்தவேற் படைகள்வந்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

மகாகவி பாரதியார்

தாலாட்டும் பூங்காற்று

இது ஐம்பது வருடங்களாக தமிழ் மக்களை தாலாட்டிக் கொண்டிருக்கும் தென்றலை பற்றிய பதிவு. டி.ஆர் மகாலிங்கம் முதல் சங்கர் மகாதேவன் வரை இந்த குரல் இணை சேராத ஆண் குரலே இல்லை. ஆர்.பார்த்தசாரதி முதல் யுவன் சங்கர் ராஜா வரை இந்த குரலுக்கு மெட்டமைக்காத இசையமைப்பாளர்களும் இல்லை. இசையில் பல பரிமாணங்களை கொண்டது தமிழ் திரை. அத்தனை பரிமாணங்களிலும் முத்திரை பதித்தக் குரல். தாய்மை, பக்தி, கருணை, இரக்கம், கோபம், காதல்,விரசம், சோகம் என்று எல்லா பாவங்களையும் பாடலில் கொண்டுவரும் அசாத்திய திறமை கொண்ட குரல். தென்றலாய் உள்ளம் வருடும் அந்த குரல் எஸ்.ஜானகியுடையது என்று நீங்கள் ஊகித்திருப்பீர்கள். வரும் நாட்களில் அவர் பாடிய பல பாடல்களை தாங்கி வரும் இந்த தொடர்.



முதல் பாடலாக இளையாராஜாவின் இசையில் கோபுர வாசலிலே படத்தில் அவர்
பாடிய பாடல்.

தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா
நீ கேட்டு பாராட்டு ஓ… மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ.. நெஞ்சமே ஓ.. நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே
தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா
நீ கேட்டு பாராட்டு ஓ.. மன்னவா


நள்ளிரவில் நான் கண் விழிக்க
உன் நினைவில் என் மெய் சிலிர்க்க
பஞ்சணையில் நீ முள் விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாக
காணும் கோலங்கள் யாவும் நீயாக
வாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம்
தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா
நீ கேட்டு பாராட்டு ஓ.. மன்னவா


எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்
காலை நான் பாடும் காதல் பூபாளம்
காதில் கேட்காதோ கண்ணா என்னாளும்
ஆசையில் நாள்தோரும் நான் தொழும்
ஆலயம் நீ அல்லவா


தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா
நீ கேட்டு பாராட்டு ஓ.. மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ.. நெஞ்சமே ஓ.. நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே
தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா
நீ கேட்டு பாராட்டு ஓ.. மன்னவா

படம்: கோபுர வாசலிலே
இசை: இளையராஜா
குரல்: எஸ்.ஜானகி

















Thaalaattum.mp3











free web hit counter image
http://www.hit-counter-download.com/