Thursday, September 20, 2007

தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்

குயில் கூவும் வயல் வரப்புகள்,தெள்ளிய நீரோடை, ஆரவாரமில்லாத கிராமத்து மக்கள் இவை எல்லாம் எளிமையான தான்.
ஆனால் அந்த எளிமை தான் எத்தனை அழகு

ஆர்ப்பாட்டமெல்லாம் அடங்கிய பிறகு எளிமையைத் தான் மனம் நாடும்
ஆர்ப்பாட்டமான அழகெல்லாம் ஆயுள் வரை மனதில் நிலைப்பதில்லை.

இந்த பாடலும் எளிமையான அழகை தான் நம் கண் முன்னே கொண்டு வரும்.

தேவா என்ற இசையமைப்பாளரை இணைய வாசகர்கள் மறந்து வருகிறார்கள்
90 களில் அவர் பல அருமையான பாடல்களுக்கு மெட்டமைத்திருக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

ஜானகியின் குரல் 100% மெட்டோடு பொருந்தி பாடலின் உயிராகின்றது

திரும்பத் திரும்ப கேட்கத் தோன்றும் வரிகள்


“துள்ளி விழும் அருவியைப் போல்
உன்னுடைய பார்வை என் மேல் பட்டவுடன் பறந்து வானில் சிறகடிப்பதென்ன”


கண்டிப்பாக தனிமையில் கேட்க வேண்டிய பாடல்

தலைவனை நினைத்து ஏங்கும் பெண் ஜானகி அவர்களின் குரலில் இதோ



தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்
எனை வாட்டும் பூ மனம் இங்கு வாழ்த்துதே தினம்

தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்
எனை வாட்டும் பூ மனம் இங்கு வாழ்த்துதே தினம்
தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்

மாலையிட்டு பூ முடித்து மஞ்சளிட்டு நான் குளித்து
மன்னவனைத் தேடித் தேடி நான் மயங்குகிறேன்
தேரில் வரும் போதும் சுகம் தென்றல் தரும் நாதம் சுகம்
தெய்வத்திற்கு நன்றி சொல்லி நான் வணங்குகிறேன்
மஞ்சளோடு குங்குமமும் மன்னவனின் பூஜைக்கென்றுநான் படைத்தேன்
உயிரிலே உறவிலே கலந்து வாழ்கிறேன்
நான் நினைத்து பார்க்கிறேன் உன் நிழலில் சாய்கிறேன்

தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்
எனை வாட்டும் பூ மனம் இங்கு வாழ்த்துதே தினம்
தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்

துள்ளி விழும் அருவியைப் போல்
உன்னுடைய பார்வை என் மேல் பட்டவுடன் பறந்து வானில் சிறகடிப்பதென்ன
என்னருகில் நீ இருந்து உன்னிரண்டு கண் மலர்ந்தால்
நெல்லின் மணி போல எந்தன் நிழல் தெரிவதென்ன
பெண்ணிலவு உன்னை எண்ணி வெண்ணிலவைப் போல இங்கு தேய்வதென்ன
தலைவனே தழுவ வா தனிமை வாட்டுது வா பருவம் ஏங்குது
முள்ளில் படுத்துத் தூங்குது

தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்
எனை வாட்டும் பூ மனம் இங்கு வாழ்த்துதே தினம்
தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்

படம்: என் ஆசை மச்சான்
இசை: தேவா
வரிகள்: வாலி
வெளியான வருடம்: 1996

பாடலை கேட்க இங்கே க்ளிக்கவும்


Thalaivanai-EnAsai...




free web hit counter image


Wednesday, September 5, 2007

மாமர கிளியே உன்ன இன்னும் நா மறக்கலயே

மாமரம், கிளி, மாசு இல்லா மனம் கொண்ட மக்கள் இவை யாவும் கிராமத்திற்கே உரித்தானது
ஜானகியின் துள்ளல் நிறைந்த குரலில் ஒரு கிராமத்து பெண்ணின் காதல் வெளிப்படும் அழகை பாருங்கள்.


திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டும் இந்த பாடலின் இரண்டு வரிகள்

" அட டட மம்முதங்கணையே
வந்து வந்து மயக்குது எனையே "

மயக்கும் குரலில் இதோ பாடல்


அட டட மாமர கிளியே
உன்ன இன்னும் நா மறக்கலயே

அட டட மாமர கிளியே
உன்ன இன்னும் நா மறக்கலயே
ரண்டு நாளா உன்ன எண்ணி பச்சத் தண்ணிக் குடிக்கலயே
அட டட மாமர கிளியே ஏ......ஏ

உன்ன நினைச்சே மஞ்சளரச்சேன்
மாசக் கணக்கா பூசிக் குளிச்சேன்
அட என்னாட்டம் ராசாத்தி எவ இருக்கா சொல்லு
உன்ன நினைச்சே மஞ்சளரச்சேன்
மாசக் கணக்கா பூசிக் குளிச்சேன்
அட என்னாட்டம் ராசாத்தி எவ இருக்கா சொல்லு
அட டட மாதுளங்கனியே இதை இன்னும் நீ நினைக்கலயே
கிட்ட வாயேன் கொத்தி போயேன்
உன்ன நா தடுக்கலயே மறுக்கலயே

அட டட மாமர கிளியே
உன்ன இன்னும் நா மறக்கலயே
ரண்டு நாளா உன்ன எண்ணி பச்சத் தண்ணிக் குடிக்கலயே
அட டட மாமர கிளியே

உப்பக் கலந்தா கஞ்சி இனிக்கும்
உன்னக் கலந்தா நெஞ்சு இனிக்கும்
அட பரிசந்தா போட்டாச்சு பாக்கு மாத்தியாச்சு
உப்பக் கலந்தா கஞ்சி இனிக்கும்
உன்னக் கலந்தா நெஞ்சு இனிக்கும்
அட பரிசந்தா போட்டாச்சு பாக்கு மாத்தியாச்சு
அட டட தாமரை கொடியே இது
உன் தோள் தொடரலியே
செல்லக் கண்ணு சின்னப் பொண்ணு இத
நீ நினைக்கலயே அணைக்கலயே

அட டட மாமர கிளியே
உன்ன இன்னும் நா மறக்கலயே
ரண்டு நாளா உன்ன எண்ணி பச்சத் தண்ணிக் குடிக்கலயே
அட டட மாமர கிளியே..

தந்தே நத்த தந்தே நா நா
தந்தீ நா தீநந்தாநா
நந்தா நா
தந்தீந தீநந்திந தாநா

மீன புடிக்க தூண்டிருக்கு
நீரைப் புடிக்க தொண்டியிருக்கு
அட உன்னத் தான் நா புடிக்க
கண் வலையப் போட்டேன்
அட டட மம்முதங்கணையே
வந்து வந்து மயக்குது எனையே
இந்த ஏக்கம் ஏது தூக்கம்
பாய போட்டு படுக்கலயே புடிக்கலயே


அட டட மாமர கிளியே
உன்ன இன்னும் நா மறக்கலயே
ரண்டு நாளா உன்ன எண்ணி பச்சத் தண்ணிக் குடிக்கலயே
அட டட மாமர கிளியே ஏ...ஏ


படம்
: சிட்டுக் குருவி
இசை: இசைஞானி
பாடல்: வாலி
வெளியான ஆண்டு: 1978

பாடலை கேட்க இங்கே க்ளிக்கவும்

Chittukuruvi-ADADA...





free web hit counter image