நாட்டுப்புற மெட்டிலே பாடல்கள் இருந்தாலும், அவை கிராமியப் பாடல்கள்தான் என்று மக்களுக்கு உடனே புரிவது பாடுபவர்களின் உச்சரிப்பால்தான். அப்படிப் பார்க்கையிலே, இளையராஜாவுடைய பெரும்பாலான கிராமிய மணம் கமழும் பாடல்களை எஸ்.ஜானகி அவர்களே பாடியுள்ளார். அதன் காரணம் பாடல் வரிகளை அப்படியே உள்வாங்கிக்கொண்டு ஒரு கிராமத்துப் பெண் எப்படி உச்சரிப்பாளோ அப்படியே வெளிக்கொணரக் கூடியவர் எஸ்.ஜானகி என்பதனால்தான்.
இந்தப் பாடலிலும் 'இந்திரன் சந்திரனும்' என்று வருகிற இடத்தில் 'இந்திரஞ்சந்திரனும்' என்று பாடி இருப்பார். இது அச்சு அசலாக கிராமத்தில் உச்சரிக்கக் கூடிய முறை. அடுத்தது 'நான் கூட மனசுக்குள்ளே ஆச வளத்திக்கிட்டேன்' என்று வரும். அதில் 'வளத்திக்கிட்டேன்' என்பதும் நம்ம ஊர் பக்கம் பேசப்படுவதுதான்.
ஒரு பந்தைத் தூக்கி எறிந்து பிடிக்கக்கூடிய லாவகம் எஸ்.ஜானகியுடைய பாடும் விதத்தில் தெரிகிறது. 'தூதுவளை இலை அரைச்சு... தொண்டையில தான் நனைச்சு' என்று வார்த்தைகளை வீசி எறிகிறார். வேறு எந்த ஒரு பாடகருக்கும் இந்த லாவகம் வராது என்றே சொல்வேன்.
இந்தப் பாடலிலே மந்திரம் போல என்னைத் திரும்பத் திரும்ப கேட்க வைக்கக்கூடிய வரி,
"சுத்துற கண்ணுல சிக்குனு என்னை சிறையிடலாமோ" .
எஸ்.ஜானகியுடைய குரலின் இனிமை, இந்த இடத்தில் மிக அதிகமாகத் தென்படுவதாலோ இல்லை ஒரு சுத்து சுத்தி 'சிறையிடலாமோ' என்று மேலே ஏறக்கூடிய விதமா எது இந்த வரிகளுக்கு அழகு என்று தெரியவில்லை.
"சத்தமிட்டா உன் நிலைமை என்னாகும்"
இரண்டாவது சரணம் முடியும் இந்த இடத்தில் பாடகியுடைய அக்மார்க் சிரிப்பு, பாடலைக் கேட்பவர்கள் யாருடைய உதட்டிலும் ஒரு புன்னகையை பூக்கச் செய்து விடும்.
தூதுவளை இலை அரைச்சு..
தொண்டையில தான் நனைச்சு
மாமங்கிட்ட பேசப்போறேன் மணிக்கணக்கா
தூதுவளை இலை அரைச்சு..
தொண்டையில தான் நனைச்சு
மாமங்கிட்ட பேசப்போறேன் மணிக்கணக்கா
தூண்டா மணிவிளக்க தூண்டி விட்டு எறிய வச்சு
உம்முகத்தை பாக்கப் போறேன் நாள் கணக்கா
அந்த இந்திரஞ் சந்திரனும் மாமன் வந்தா எந்திரிச்சு நிக்கணும்
அந்த ரம்பையும் ஊர்வசியும் மாமனுக்கு தொண்டுகள் செஞ்சிடனும்
நான் காத்தாகி ஊத்தாகி மாமனைத் தழுவி கட்டிக்கணும்
தூதுவளை இலை அரைச்சு..
தொண்டையில தான் நனைச்சு
நானும் கூட பேசப் போறேன் மணிக்கணக்கா
தூண்டா மணிவிளக்க தூண்டி விட்டு எறிய வச்சு
உம்முகத்தை பாக்கப் போறேன் நாள் கணக்கா
நாள் தோரும் காத்திருந்தேன்
நானே தவமிருந்தேன்
உனக்காகத்தான் கண்ணே உனக்காகத் தான்
நான் கூட மனசுக்குள்ளே ஆச வளத்திக்கிட்டேன்
உன்னப் பாத்துத்தான் மாமா உன்னப் பாத்துத்தான்
அட முத்துன கிறுக்கு மொத்தமும் தெளிய முறையிடலாமோ
சுத்துற கண்ணுல சிக்குனு என்ன சிறையிடலாமோ
எத்தன நாள் இப்படி நான் ஏங்குறது
பொட்டு வச்சி பூ முடிக்கும் நாள் இருக்கு
தூதுவளை இலை அரைச்சு..
தொண்டையில தான் நனைச்சு
மாமங்கிட்ட பேசப்போறேன் மணிக்கணக்கா
தூண்டா மணிவிளக்க தூண்டி விட்டு எறிய வச்சு
உம்முகத்தை பாக்கப் போறேன் நாள் கணக்கா
ஊர் தூங்கும் வேளையிலும் நான் தூங்கப் போனதில்லை
உன்னால தான் கண்ணே உன்னால தான்
யார் பேச்ச கேட்டாலும் என் காதில் கேட்பதெல்லாம் உன் பேரு தான்
மச்சான் உன் பேரு தான்
ஏ.. இத்தனை நினைப்பும் என் மேல இருந்தும் எட்டி போகலாமோ
சட்டப்படி ரெண்டும் கட்டிக்கும் முன்னே ஒட்டிக் கொள்ளலாமோ
முத்தமிட்டா மோசமென்ன உண்டாகும்
சத்தமிட்டா உன் நிலமை என்னாகும்… (சிரிப்பு)
தூதுவளை இலை அரைச்சு..
தொண்டையில தான் நனைச்சு
மாமங்கிட்ட பேசப்போறேன் மணிக்கணக்கா
தூண்டா மணிவிளக்க தூண்டி விட்டு எறிய வச்சு
உம்முகத்தை பாக்கப் போறேன் நாள் கணக்கா
அந்த இந்திரஞ் சந்திரனும் மாமன் வந்தா எந்திரிச்சு நிக்கணும்
அந்த ரம்பையும் ஊர்வசியும் மயிலுக்கு தொண்டுகள் செஞ்சிடனும்
நான் காத்தாகி ஊத்தாகி மாமனைத் தழுவி கட்டிக்கணும்
தூதுவளை இலை அரைச்சு..
தொண்டையில தான் நனைச்சு
நானும் கூட பேசப் போறேன் மணிக்கணக்கா
தூண்டா மணிவிளக்க தூண்டி விட்டு எறிய வச்சு
உம்முகத்தை பாக்கப் போறேன் நாள் கணக்கா
பாடலை கேட்க இங்கே க்ளிக்கவும்
ThaiManasu-Thoothu... |