கண்ணன் பாடல்களிலே மிகப் பிரசித்தமானப் பாடல் இது.
பரதம் ஆடுவதற்கு ஏற்ற பாடல் என்பதால் இந்தப் பாடல் ஒலிக்காத மேடைகளே இல்லை எனலாம்
வசந்தராகம் படத்திற்காக M.S .விஸ்வநாதன் அவர்கள் இசையில் அம்மா பாடிய அற்புதமான பாடல் இது
கண்ணனை நினைத்து ஏங்கும் மீராவின் ஏக்கம் இந்த வரிகளை அம்மா பாடும் போது நம்மையும் ஏங்க வைக்கிறது
“மை கூட கரைகின்றதே இன்று பன்னீரும் சுடுகின்றதே”
கண்ணா… கண்ணா…. கண்ணா…
கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே
கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே
அந்த மீராவைப் போல் ஏங்கினேன்
தினம் வாடாமல் நான் வாடினேன்
மீராவைப் போல் ஏங்கினேன்
தினம் வாடாமல் நான் வாடினேன்
கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே
கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே
கானத்தில் குழல் நாதத்தில் ஒரு கந்தர்வ லோகத்தில்
எனைக் கொண்டுச் சேர்ப்பான்
மோனத்தில் அந்தி நேரத்தில் அவன் முந்நூறு முத்தங்கள்
ஒன்றாகக் கேட்பான்
கார்கூந்தல் தனை நிவுவான் அதில்
கல்யாண சுகம் தேடுவான்
அந்தக் கணத்தில் என் உதட்டில் தன் உதட்டால்
முத்தெடுப்பான். வானம் எந்தன் காலில் வந்து கோலம் போடாதோ
கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே
கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே
மோகத்தில் விழி ஓரத்தில் கண்ணன் பார்த்தாலும் என்
நெஞ்சில் பசி ஆறிப் போகும்
காமத்தில் நடு ஜாமத்தில்
இமை மூடாத என் கண்ணில் நதி ஓடி பாயும்
மை கூட கரைகின்றதே இன்று பன்னீரும் சுடுகின்றதே
அந்தி இருட்டில் என் விழிக்குள் நின்றிருப்பான்
கண்மணிக்குள் இங்கும் அங்கும் எங்கும் காதல் கண்ணன் கோலங்கள்
கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே
கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே
படம் : வசந்தராகம்
இசை : M.S. விஸ்வநாதன்
பாடலை கேட்க இங்கே க்ளிக்கவும்
7 comments:
The song is really very nice one.
ஸ்ரீசரண் சார்,
அருமையா மெலோடி பாடல் தந்தூருக்கீங்க வாழ்த்துக்கள்.
Nice song from MSV.
Sj in renditon - Eppodhum Special dhan.. Unique Voice and rendition.
Thanks for the song Sharan.
With Love,
Usha Sankar.
very nice song and wish many more songs to sung by our beloved Amma
thanks for the MSV
ஸ்ரீசரண், ரெண்டு நாளைக்கு முன்னாடி இந்தப் பாட்டை யுடியூப்புல பாத்துக் கேட்டு ரசிச்சேன். இந்தாங்க லிங்கு.
நல்ல பாட்டை நினைவுபடுத்தியமைக்கு நன்றி.
http://www.youtube.com/watch?v=Is_D8uxygjo
Hi sir
this song is beautiful one...
u can even post the best of Janaki ma...from Nizhalgal this song was not on screen. Thoorathil naan kanda unn mugam...with Raja sir..this is also like Meera song
All the Best
Regards
saravan, covai ravee, usha , msfg73 , ragavan உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.
Post a Comment