Wednesday, July 25, 2007

தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்

தாய்மை உணர்ச்சி மேலிட ஜானகி அவர்கள் லக்ஷிமிகாந்த் பியாரிலால் இசையில்
"உயிரே உனக்காக" படத்தில் பாடிய பாடலைத் தான் இந்த பதிவில் கேட்கப் போகிறீர்கள்

வானில் உள்ள விண்மீன் எல்லாம் கண்ணுங்குகிறதாம் இந்தக் குரலைக் கேட்டு

ஒவ்வொரு அட்சரத்திற்கும் பாவம் கொடுக்கக் கூடியவர் SJ. இந்தப் பாடலிலும்
ஒரு இடத்தில் 'அன்னை நெஞ்சில் சாய்ந்திடுங்கள்' என்று வரும். சாய்ந்திடுங்கள் என்று பாடும் போது
குரலும் அப்படியே சாய்வது போல் இருக்கும்.

இந்தப் பாடலை வெகுவாக ரசிக்க வேண்டும் என்றால் இரவில் உறங்குவதற்கு முன் கேளுங்கள்

உங்கள் தாயோ அல்லது உங்கள் இஷ்ட தெய்வமோ (பெண் தெய்வம்) இந்தப் பாடலைப் பாடுவது போல
கற்பனை செய்துக் கொண்டு பாட்டைக் கேளுங்கள். சொர்க்கம் நிச்சயம்


தேன் குரலில் தேனூறும் ராகம் திகட்டாமல் இருப்பது என்ன அதிசயமோ



ஆரீராரோ ஆரீராரீரோ
ஆரீராரோ ஆரீராரீரோ

தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே....ஏ..ஏ...ஏ...
உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்....
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே........ஏ..ஏ...ஏ...

கண்ணின் மணியே நீயும் உறங்கு
கண்ணின் மணியே நீயும் உறங்கு

ஆடாத தீபம் தான் என் இல்லம்...ம்..ம்..ம்
பூங்காற்றுக்கும் தாங்காது என் உள்ளம்...ம்..ம்..ம்
உன் அன்பாலே பொங்காதோ ஆனந்த வெள்ளம்
கனவுகளே கனவுகளே இரவெனும் தீபம் எரிகின்ற நேரம்
உறவைத் தேடி வாருங்கள் கண்களில்....ல்...ல்..ல்
தென்றல் வீசும் கண்ணுறங்கு
உன்னை நீயே மறந்துறங்கு

தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே....ஏ..ஏ...ஏ...
ராரீரோ ஆரீராரீரோ
கண்ணின் மணியே நீயும் உறங்கு


ஆகாயம் மண் மீது வீழாது...
நம் சொந்தங்கள் எந்நாளும் மாறாது....
இனி என் போன்ற அன்னைக்கு ஏகாந்தம் ஏது
உறவுகளால் ஒரு உலகம்
இது ஒரு தோட்டம் கிளிகளின் கூட்டம்
ஆட்டம் பாட்டம் ஆர்பாட்டம் கேட்கலாம்
அன்னை நெஞ்சில் சாய்ந்திடுங்கள்
இன்னும் கொஞ்சம் ஓய்வெடுங்கள்

தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே....ஏ..ஏ...ஏ...
கண்ணின் மணியே நீயும் உறங்கு
கண்ணின் மணியே நீயும் உறங்கு
ஆரீராரோ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் லால லால லா



படம்: உயிரே உனக்காக
இசை: லக்ஷ்மிகாந்த் பியாரிலால்
வெளியான வருடம்: 1985
வரிகள்: வைரமுத்து


பாடலை கேட்க இங்கே க்ளிக்கவும்

UyiraeUnakkaaga-Th...




free web hit counter image

Friday, July 20, 2007

நிலவும் மலரும் -- SPB & S.Janaki இணைந்து பாடும் இசை நிகழ்ச்சி




சென்னையில் வருகிற 29 ஆம் தேதி எஸ்.பி.பி யும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடி கலக்கப் போகிறார்கள்
நீண்ட காலமாக இது போன்ற இசை விழாவிற்கு காத்திருந்த பலரில் நானும் ஒருவன்.
என் ஆதர்ஷ பாடகர்கள் இரண்டு பேரும் ஒரே மேடையில் பாடப் போகிறார்கள்

விவரம்

இடம்: நேரு உள் விளையாட்டு அரங்கம்
தேதி : 29 ஜூலை
நேரம் : மாலை 6 மணி
நுழைவு சீட்டு கிடைக்குமிடங்கள் : எல்லா நாயுடு ஹால் கடைகளிலும்

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 9884152200

Wednesday, July 11, 2007

மானாட கொடி பூவாடும் ஒரு சோலை

எண்பதுகளில் வெளியான பெரும்பான்மையான திரைப்படங்களில் இயற்கையை ரசித்து கதாநாயகி பாடுவது போல் ஒரு பாடல்
கண்டிப்பாக இருக்கும். ஒன்றிரண்டு பாடல்களைத் தவிர இது போன்ற எல்லா பாடல்களையும் அம்மாவே பாடி இருப்பார்.
அந்த வரிசையில் அமைந்த பாடல்கள் எண்ணற்றவை. இந்த பதிவில் நடிகை ரம்யாகிருஷ்ணன் அறிமுகமான முதல் வசந்தம் என்ற
படத்தில் ஜானகி அவர்கள் பாடலை கேட்க போகிறீர்கள்.

இயற்கையை வியக்கும் இந்த பாடலில் "மேகத்தின் நாட்டியம் தந்தனன்னா தானனன்னா"
என்ற இடத்தில் வரிகள் அம்மாவின் குரலில் நாட்டியமாடும்
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்




மானாட கொடி பூவாடும் ஒரு சோலை
நானாட அதில் தேனோடும் இளம் மாலை
தோட்டத்து பூக்கள் எல்லாம் தேடுது என்னை
மானாட கொடி பூவாடும் ஒரு சோலை
நானாட அதில் தேனோடும் இளம் மாலை


காற்சலங்கை ஓசையிட்டால் காட்டில் ஒரு பாட்டு வரும்
கைவளை தாளங்கள்
தந்தனன்னா தானனன்னா.. தந்தனன்னா தானனன்னா
ஓ....தேனோடும் வண்ணமலை நீரோடும் வெள்ளி அலை
ஜாடை மின்ன மின்ன ஆடை பின்ன பின்ன ஓ....

மானாட கொடி பூவாடும் ஒரு சோலை
நானாட அதில் தேனோடும் இளம் மாலை

வானமென்னும் மேடையிலே வான வில்லின் ஓவியங்கள்
மேகத்தின் நாட்டியம்
தந்தனன்னா தானனன்னா.. தந்தனன்னா தானனன்னா
ஓ..ஊர்கோலம் வண்ணக்கிளி ஆலோலம் சொல்லும் மொழி
அன்னம் துள்ளத் துள்ள வண்ணம் என்ன சொல்லவோ

மானாட கொடி பூவாடும் ஒரு சோலை
நானாட அதில் தேனோடும் இளம் மாலை
தோட்டத்து பூக்கள் எல்லாம் தேடுது என்னை
மானாட கொடி பூவாடும் ஒரு சோலை
நானாட அதில் தேனோடும் இளம் மாலை



படம்: முதல் வசந்தம்
இசை: இசைஞானி
வெளியான வருடம்: 1986
ராகம்: சுத்த சாவேரி


பாடலை கேட்க இங்கே க்ளிக்கவும்



Maanaa Kodi.mp3



free web hit counter image

Tuesday, July 3, 2007

நதியோடும் கரையோரம் ஒரு ராகம் அலைபாயும்

இளையராஜா-மலையாள இயக்குனர்கள் இந்த கூட்டணியில் உருவான பாடல்கள் அனைத்தும்
இதமான மெலடிகளாக அமையும். பரதன் இயக்கிய ஆவாரம்பூ படத்தில் எல்லா பாடல்களுமே அருமை

சோகத்தில் கொஞ்சம் சுகம் உண்டு

சோகமே இல்லையென்றாலும் கூட இந்த பாடலின் சுகம் உங்களை தாலாட்ட்ம்

காதலன் பிரிவால் வாடும் காதலியின் சோகம் அம்மாவின் குரலில்

தனிமையில் இந்த பாடலை கேட்டு பாருங்கள்.




நதியோடும் கரையோரம் ஒரு ராகம் அலைபாயும்
அதிலே இரு உயிரே தினம் கரையும்
நதியோடும் கரையோரம் ஒரு ராகம் அலைபாயும்
அதிலே இரு உயிரே தினம் கரையும்

நினைவோ வெறும் கனவோ இது எதுவோ
காதல் வரும் யார்க்கும் இந்த பாதை பொதுவோ

நதியோடும் கரையோரம் ஒரு ராகம் அலைபாயும்
அதிலே இரு உயிரே தினம் கரையும்
அதிலே இரு உயிரே தினம் கரையும்

பல கோலம் போடும் வானம் மாறும் தடுமாறும்
புது ராகம் பாடும் காற்றோ சோகம் பாடும்
பனி தூங்கும் பூவின் தோற்றம் ஏனோ அதில் மாற்றம்
பகல் கூட இரவாய் தோன்றும் பாதை மாறும்
காதல் என்பது காலம் எங்கிலும் காத்து நின்றிடவோ
ஆசை என்பது ஆடிக் காற்றினில் ஓடி சென்றிடவோ
காதல் என்பது காலம் எங்கிலும் காத்து நின்றிடவோ
ஆசை என்பது ஆடிக் காற்றினில் ஓடி சென்றிடவோ
உறவே வெறும் கனவே வரும் நினைவே பழங்கதையே
கனவே என தெரிந்தும் மனம் நினைக்கும் அதையே

நதியோடும் கரையோரம் ஒரு ராகம் அலைபாயும்
அதிலே இரு உயிரே தினம் கரையும்

இளங்காதல் ஆசை நெஞ்சில் ஏக்கம் அது தாக்கும்
இரவென்ன பகலும் என்ன தூக்கம் போகும்
பிரிவேதும் அறியா நெஞ்சில் உருவானது பாரம்
உறவென்னும் உணர்வால் இங்கே உயிரே பாரம்
மோகம் என்பது வேகம் உள்ளது வேலி போட்டிடவோ
வேலி போட்டோரு காதல் தீயினை பாதுகாத்திடவோ
மோகம் என்பது வேகம் உள்ளது வேலி போட்டிடவோ
வேலி போட்டோரு காதல் தீயினை பாதுகாத்திடவோ
விதியால் ஒரு சதியால் இரு வழியாய் திசை பிரிந்தோம்
ஒரு நாள் அது திருநாள் ஒரு உணர்வால் இணைவோம்


நதியோடும் கரையோரம் ஒரு ராகம் அலைபாயும்
அதிலே இரு உயிரே தினம் கரையும்
நினைவோ வெறும் கனவோ இது எதுவோ
காதல் வரும் யார்க்கும் இந்த பாதை பொதுவோ

நதியோடும் கரையோரம் ஒரு ராகம் அலைபாயும்
அதிலே இரு உயிரே தினம் கரையும்
அதிலே இரு உயிரே தினம் கரையும்


படம் : ஆவாரம்பூ
இசை: இளையராஜா
இயக்கம்: பரதன்
பாடியவர்: எஸ்.ஜானகி




Nathiyodum Karaioy...




free web hit counter image