Sunday, January 3, 2010

தூதுவளை இலை அரைச்சு..

தேவா என்ற இசையமைப்பாளரிடம் இருந்து மிக அழகான முத்துக்கள் போன்ற பாடல்கள் நிறைய வந்திருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் இன்று நாம் கேட்கப் போகும் பாடல். 'தாய் மனசு' என்ற படத்தில் எஸ்.ஜானகியும், மனோவும் பாடியது. கிராமிய மணம் கமழும் இந்தப் பாடல் மிக அழகாக மெட்டமைக்கப்பட்டு பாடப்பட்டுள்ளது.

நாட்டுப்புற மெட்டிலே பாடல்கள் இருந்தாலும், அவை கிராமியப் பாடல்கள்தான் என்று மக்களுக்கு உடனே புரிவது பாடுபவர்களின் உச்சரிப்பால்தான். அப்படிப் பார்க்கையிலே, இளையராஜாவுடைய பெரும்பாலான கிராமிய மணம் கமழும் பாடல்களை எஸ்.ஜானகி அவர்களே பாடியுள்ளார். அதன் காரணம் பாடல் வரிகளை அப்படியே உள்வாங்கிக்கொண்டு ஒரு கிராமத்துப் பெண் எப்படி உச்சரிப்பாளோ அப்படியே வெளிக்கொணரக் கூடியவர் எஸ்.ஜானகி என்பதனால்தான்.




இந்தப் பாடலிலும் 'இந்திரன் சந்திரனும்' என்று வருகிற இடத்தில் 'இந்திரஞ்சந்திரனும்' என்று பாடி இருப்பார். இது அச்சு அசலாக கிராமத்தில் உச்சரிக்கக் கூடிய முறை. அடுத்தது 'நான் கூட மனசுக்குள்ளே ஆச வளத்திக்கிட்டேன்' என்று வரும். அதில் 'வளத்திக்கிட்டேன்' என்பதும் நம்ம ஊர் பக்கம் பேசப்படுவதுதான்.

ஒரு பந்தைத் தூக்கி எறிந்து பிடிக்கக்கூடிய லாவகம் எஸ்.ஜானகியுடைய பாடும் விதத்தில் தெரிகிறது. 'தூதுவளை இலை அரைச்சு... தொண்டையில தான் நனைச்சு' என்று வார்த்தைகளை வீசி எறிகிறார். வேறு எந்த ஒரு பாடகருக்கும் இந்த லாவகம் வராது என்றே சொல்வேன்.


இந்தப் பாடலிலே மந்திரம் போல என்னைத் திரும்பத் திரும்ப கேட்க வைக்கக்கூடிய வரி,

"சுத்துற கண்ணுல சிக்குனு என்னை சிறையிடலாமோ" .

எஸ்.ஜானகியுடைய குரலின் இனிமை, இந்த இடத்தில் மிக அதிகமாகத் தென்படுவதாலோ இல்லை ஒரு சுத்து சுத்தி 'சிறையிடலாமோ' என்று மேலே ஏறக்கூடிய விதமா எது இந்த வரிகளுக்கு அழகு என்று தெரியவில்லை.

"சத்தமிட்டா உன் நிலைமை என்னாகும்"

இரண்டாவது சரணம் முடியும் இந்த இடத்தில் பாடகியுடைய அக்மார்க் சிரிப்பு, பாடலைக் கேட்பவர்கள் யாருடைய உதட்டிலும் ஒரு புன்னகையை பூக்கச் செய்து விடும்.


தூதுவளை இலை அரைச்சு..
தொண்டையில தான் நனைச்சு
மாமங்கிட்ட பேசப்போறேன் மணிக்கணக்கா

தூதுவளை இலை அரைச்சு..
தொண்டையில தான் நனைச்சு
மாமங்கிட்ட பேசப்போறேன் மணிக்கணக்கா
தூண்டா மணிவிளக்க தூண்டி விட்டு எறிய வச்சு
உம்முகத்தை பாக்கப் போறேன் நாள் கணக்கா
அந்த இந்திரஞ் சந்திரனும் மாமன் வந்தா எந்திரிச்சு நிக்கணும்
அந்த ரம்பையும் ஊர்வசியும் மாமனுக்கு தொண்டுகள் செஞ்சிடனும்
நான் காத்தாகி ஊத்தாகி மாமனைத் தழுவி கட்டிக்கணும்

தூதுவளை இலை அரைச்சு..
தொண்டையில தான் நனைச்சு
நானும் கூட பேசப் போறேன் மணிக்கணக்கா
தூண்டா மணிவிளக்க தூண்டி விட்டு எறிய வச்சு
உம்முகத்தை பாக்கப் போறேன் நாள் கணக்கா

நாள் தோரும் காத்திருந்தேன்
நானே தவமிருந்தேன்
உனக்காகத்தான் கண்ணே உனக்காகத் தான்
நான் கூட மனசுக்குள்ளே ஆச வளத்திக்கிட்டேன்
உன்னப் பாத்துத்தான் மாமா உன்னப் பாத்துத்தான்
அட முத்துன கிறுக்கு மொத்தமும் தெளிய முறையிடலாமோ
சுத்துற கண்ணுல சிக்குனு என்ன சிறையிடலாமோ
எத்தன நாள் இப்படி நான் ஏங்குறது
பொட்டு வச்சி பூ முடிக்கும் நாள் இருக்கு

தூதுவளை இலை அரைச்சு..
தொண்டையில தான் நனைச்சு
மாமங்கிட்ட பேசப்போறேன் மணிக்கணக்கா
தூண்டா மணிவிளக்க தூண்டி விட்டு எறிய வச்சு
உம்முகத்தை பாக்கப் போறேன் நாள் கணக்கா

ஊர் தூங்கும் வேளையிலும் நான் தூங்கப் போனதில்லை
உன்னால தான் கண்ணே உன்னால தான்
யார் பேச்ச கேட்டாலும் என் காதில் கேட்பதெல்லாம் உன் பேரு தான்
மச்சான் உன் பேரு தான்
ஏ.. இத்தனை நினைப்பும் என் மேல இருந்தும் எட்டி போகலாமோ
சட்டப்படி ரெண்டும் கட்டிக்கும் முன்னே ஒட்டிக் கொள்ளலாமோ
முத்தமிட்டா மோசமென்ன உண்டாகும்
சத்தமிட்டா உன் நிலமை என்னாகும்… (சிரிப்பு)

தூதுவளை இலை அரைச்சு..
தொண்டையில தான் நனைச்சு
மாமங்கிட்ட பேசப்போறேன் மணிக்கணக்கா
தூண்டா மணிவிளக்க தூண்டி விட்டு எறிய வச்சு
உம்முகத்தை பாக்கப் போறேன் நாள் கணக்கா
அந்த இந்திரஞ் சந்திரனும் மாமன் வந்தா எந்திரிச்சு நிக்கணும்
அந்த ரம்பையும் ஊர்வசியும் மயிலுக்கு தொண்டுகள் செஞ்சிடனும்
நான் காத்தாகி ஊத்தாகி மாமனைத் தழுவி கட்டிக்கணும்

தூதுவளை இலை அரைச்சு..
தொண்டையில தான் நனைச்சு
நானும் கூட பேசப் போறேன் மணிக்கணக்கா
தூண்டா மணிவிளக்க தூண்டி விட்டு எறிய வச்சு
உம்முகத்தை பாக்கப் போறேன் நாள் கணக்கா


பாடலை கேட்க இங்கே க்ளிக்கவும்

ThaiManasu-Thoothu...





free web hit counter image


Tuesday, June 24, 2008

ஒரே முறை உன் தரிசனம்


தென்றல் நம்மைத் திடுக்கிட வைக்காது
தென்றல் நம்மை திசை மாற்றிச் செல்லாது

உற்ற தோழனாய் தோழியாய் கைக் கோர்த்து நடை பழகும்

இந்த பாடலும் தென்றல் போல உங்களுடன் நடந்து வரும்

பாடலின் காட்சியில் நடிகை சரண்யாவின் நடையே பிரதானப்படுத்தப் பட்டிருக்கும்

(மன்னிக்கவும்: பாடலின் வீடியோ இணையத்தில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை)



இசை தேவதையின் குரல் தென்றலாய் இதோ


ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்

ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்
என் கோவில் மணிகள் உன்னை அழைக்கும்
நெஞ்சோடு என் கண்ணொடு நீ வா

ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்

இளமை என்னும் பருவம் சிறிது காலமே
உறவில் காணும் சுகமும் விரைவில் மாறுமே
தென்றல் வந்துத் தென்றலை சேர்ந்தப் பின்பும் தென்றலே
கண்கள் ரெண்டும் காணும் காட்சி ஒன்று தான்
கண்கள் ரெண்டும் காணும் காட்சி ஒன்று தான்

ஆத்ம ராகம் பாடுவோம் அளவில்லாத ஆனந்தம் மனதிலே

ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்
என் கோவில் மணிகள் உன்னை அழைக்கும்
நெஞ்சோடு என் கண்ணொடு நீ வா

ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்

தெய்வம் என்றும் தெய்வம் கோவில் மாறலாம்
தீபம் என்றும் தீபம் இடங்கள் மாறலாம்
கீதம் போகும் பாதையில் தடைகள் ஏதும் இல்லையே
உருவம் இல்லை என்றால் உண்மை இல்லையா
உருவம் இல்லை என்றால் உண்மை இல்லையா

வானம் பூமி ஆகலாம் மனது தானே காரணம் உலகிலே

ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்

ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்
என் கோவில் மணிகள் உன்னை அழைக்கும்
நெஞ்சோடு என் கண்ணொடு நீ வா

ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்


படம்: என் ஜீவன் பாடுது
இசை: இளையராஜா
ஆண்டு: 1988


Get this widget | Track details | eSnips Social DNA




free web hit counter image


Wednesday, April 23, 2008

இசை தேவதைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

இசை தேவதை எஸ்.ஜானகியின் பிறந்தநாளில் இந்தப் பாடலை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சிய்டைகிறேன்.


பம்பரம் சுற்றுவதைப் பார்த்திருப்பீர்கள். பம்பரம் போல ஒரு குரல் பாடுவதை கேட்டிருக்கிறீர்களா



இதோ இந்தப் பாடலைக் கேளுங்கள்


அத்திமர பூவிது அருகில் சுத்தி வந்துத் தாவுது

அத்திமர பூவிது அருகில் சுத்தி வந்துத் தாவுது

நந்தவனந் தான் என் நல்ல மனந்தான்

எந்த புறமும் என் அந்தப்புரம் தான்

சிந்தனைகள் ஓட கற்பனைகள் கூட

இளமைக் கொடியில் இதழ்கள் விரியும்

அத்திமர பூவிது அருகில் சுத்தி வந்துத் தாவுது

அத்திமர பூவிது அருகில் சுத்தி வந்துத் தாவுது


புன்னகையில் புது கவிதைகள் எழுதிட பார்வைகள் மலர மலர
மெல்லிசையின் நயம் சலங்கையில் விளங்கிட பாதங்கள் அசைய அசைய
வந்த மகள் ஒரு பூங்கொடி வண்டு துளைத்திடும் மாங்கனி
சந்த மொழிகளின் காவியம் சிந்தை மயக்கிடும் ஓவியம்
கோடை வரும் நாள் வீசும் வாடை நான்
வாடை வரும் நாள் சூடும் போர்வை நான்
மல்லிகையை சூடி மந்திரங்கள் பாடி
பருவம் நடனம் பயிலும் நளினம்

அத்திமர பூவிது அருகில் சுத்தி வந்துத் தாவுது
நந்தவனந் தான் என் நல்ல மனந்தான்
எந்த புறமும் என் அந்தப்புரம் தான்
சிந்தனைகள் ஓட கற்பனைகள் கூட
இளமைக் கொடியில் இதழ்கள் விரியும்
அத்திமர பூவிது அருகில் சுத்தி வந்துத் தாவுது


புள்ளி மயில் நடம் புரிந்திட புரிந்திட பாவங்கள் விளைய விளைய
கையளவு இடை நெளிந்திட நெளிந்திட பூவுடல் வளைய வளைய
கண்ணின் இமைகளில் ஆடிடும் எண்ணக் கனவுகள் ஆயிரம்
இந்த குலமகள் நூதனம் அந்த கலைமகள் சீதனம்
பாடல் இருந்தால் ராகம் சேராதோ
ஆடல் இருந்தால் தாளம் கூடாதோ
திங்கள் ஒரு பாதி தென்றல் ஒரு பாதி
விழியில் கலந்து வழியும் வடிவம்

அத்திமர பூவிது அருகில் சுத்தி வந்துத் தாவுது
நந்தவனந் தான் என் நல்ல மனந்தான்
எந்த புறமும் என் அந்தப்புரம் தான்
சிந்தனைகள் ஓட கற்பனைகள் கூட
இளமைக் கொடியில் இதழ்கள் விரியும்
அத்திமர பூவிது அருகில் சுத்தி வந்துத் தாவுது
அத்திமர பூவிது அருகில் சுத்தி வந்துத் தாவுது




இசை: இளையராஜா

படம்: சாதனை

பாடலை கேட்க இங்கே க்ளிக்கவும்





free web hit counter image


Thursday, November 22, 2007

கண்ணன் மனம் என்னவோ




கண்ணன் பாடல்களிலே மிகப் பிரசித்தமானப் பாடல் இது.
பரதம் ஆடுவதற்கு ஏற்ற பாடல் என்பதால் இந்தப் பாடல் ஒலிக்காத மேடைகளே இல்லை எனலாம்

வசந்தராகம் படத்திற்காக M.S .விஸ்வநாதன் அவர்கள் இசையில் அம்மா பாடிய அற்புதமான பாடல் இது

கண்ணனை நினைத்து ஏங்கும் மீராவின் ஏக்கம் இந்த வரிகளை அம்மா பாடும் போது நம்மையும் ஏங்க வைக்கிறது


“மை கூட கரைகின்றதே இன்று பன்னீரும் சுடுகின்றதே”



கண்ணா… கண்ணா…. கண்ணா…
கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே
கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே
அந்த மீராவைப் போல் ஏங்கினேன்
தினம் வாடாமல் நான் வாடினேன்
மீராவைப் போல் ஏங்கினேன்
தினம் வாடாமல் நான் வாடினேன்
கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே
கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே


கானத்தில் குழல் நாதத்தில் ஒரு கந்தர்வ லோகத்தில்
எனைக் கொண்டுச் சேர்ப்பான்
மோனத்தில் அந்தி நேரத்தில் அவன் முந்நூறு முத்தங்கள்
ஒன்றாகக் கேட்பான்
கார்கூந்தல் தனை நிவுவான் அதில்
கல்யாண சுகம் தேடுவான்
அந்தக் கணத்தில் என் உதட்டில் தன் உதட்டால்
முத்தெடுப்பான். வானம் எந்தன் காலில் வந்து கோலம் போடாதோ

கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே
கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே

மோகத்தில் விழி ஓரத்தில் கண்ணன் பார்த்தாலும் என்
நெஞ்சில் பசி ஆறிப் போகும்
காமத்தில் நடு ஜாமத்தில்
இமை மூடாத என் கண்ணில் நதி ஓடி பாயும்
மை கூட கரைகின்றதே இன்று பன்னீரும் சுடுகின்றதே
அந்தி இருட்டில் என் விழிக்குள் நின்றிருப்பான்
கண்மணிக்குள் இங்கும் அங்கும் எங்கும் காதல் கண்ணன் கோலங்கள்

கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே
கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே


படம் : வசந்தராகம்
இசை : M.S. விஸ்வநாதன்

பாடலை கேட்க இங்கே க்ளிக்கவும்






free web hit counter image


Friday, October 12, 2007

சின்னப்பூ சின்னப்பூ

இனிமை இனிமை இனிமை
இந்த குரலுக்கு வேறு என்ன சொல்லி விளக்கம் கொடுக்க முடியும்.


ஜப்பானின் அழகை படம் பிடிக்கும் இந்த பாடல் நம்மையும் அந்த ஊருக்கே கூட்டிச் செல்கிறது.


சொர்க்கத்தின் அந்தபுரம் போலிருக்கும் இந்த நகரின் அழகைக் கண்டு பரவசமடையும் ஒரு இளம்பெண் பாடும் பாடல் இது.

தன் மிகப்பெரிய கண்களால் பல பாவனைகள் காட்டக்கூடிய நடிகை ராதா திரையில் தோன்றும் பாடல் இதோ



சின்னப்பூ சின்னப்பூ கண்ணெல்லாம் வண்ணப்பூ
அம்மம்மா அம்மம்மா என்னைப் போல் கன்னிப்பூ
இளவேனில் காலம் இளமாலை நேரம்
இன்பத்தை அள்ளி இரைக்கும் சொர்க்கத்தின் அந்தப்புரம் இதுவோ

சின்னப்பூ சின்னப்பூ கண்ணெல்லாம் வண்ணப்பூ
அம்மம்மா அம்மம்மா என்னைப் போல் கன்னிப்பூ


பூவெல்லாம் மெளன பாஷைகள் பேச நான் என்ன சொல்ல ஓ..
நாளெல்லாம் அந்தி நேரத்தில் எந்தன் நெஞ்சத்தைக் கிள்ள ஓ..
ஏதோ ஏதேதோ எண்ணம் கூட
உள்ளம் என் உள்ளம் ஊஞ்சல் ஆட
கோடை நாட்களில் காமன் பண்டிகை
காற்றும் பூவும் தான் காதல் பாட்டுப் பாடும் வசந்த விழா

சின்னப்பூ சின்னப்பூ கண்ணெல்லாம் வண்ணப்பூ
அம்மம்மா அம்மம்மா என்னைப் போல் கன்னிப்பூ


மேகங்கள் புத்தன் கோவில்கள் தேடி ஊர்கோலம் செல்ல ஓ..
ராகங்கள் கட்சிக் கூட்டங்கள் பாடி வாழ்த்துக்கள் சொல்ல ஓ..
இன்பம் கொண்டாடும் மக்கள் இங்கே
மண்ணில் உண்டான சொர்க்கம் இங்கே
நூறு நாடுகள் வாழும் மாந்தர்கள்
கூடும் நாளிலே நேசம் பாசம் யாவும் விளைந்திடுமோ

சின்னப்பூ சின்னப்பூ கண்ணெல்லாம் வண்ணப்பூ
அம்மம்மா அம்மம்மா என்னைப் போல் கன்னிப்பூ


நூலாடைத் தொட்டுப் போராடும் காற்றே நீ கொஞ்சம் இங்கே நில்
நான் கூட வண்ண பூ மாலை நாள் எந்த நாளோ சொல்
சின்னப்பெண் தேடும் மன்னன் யாரோ
கன்னிப்பூ சூடும் கண்ணன் யாரோ
நீலத்தாமரை நீரைத்தேடுது
பூவைப்போலவே பூவை நானும் வாடும் பருவமிது

சின்னப்பூ சின்னப்பூ கண்ணெல்லாம் வண்ணப்பூ
அம்மம்மா அம்மம்மா என்னைப் போல் கன்னிப்பூ
இளவேனில் காலம் இளமாலை நேரம்
இன்பத்தை அள்ளி இரைக்கும் சொர்க்கத்தின் அந்தப்புரம் இதுவோ

சின்னப்பூ சின்னப்பூ கண்ணெல்லாம் வண்ணப்பூ
அம்மம்மா அம்மம்மா என்னைப் போல் கன்னிப்பூ



படம் : :ஜப்பானில் கல்யாணராமன்
வருடம்: :1985
வரிகள் : :வாலி

பாடலை கேட்க இங்கே க்ளிக்கவும்

ChinnaPooChinnaPoo...




free web hit counter image


Thursday, September 20, 2007

தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்

குயில் கூவும் வயல் வரப்புகள்,தெள்ளிய நீரோடை, ஆரவாரமில்லாத கிராமத்து மக்கள் இவை எல்லாம் எளிமையான தான்.
ஆனால் அந்த எளிமை தான் எத்தனை அழகு

ஆர்ப்பாட்டமெல்லாம் அடங்கிய பிறகு எளிமையைத் தான் மனம் நாடும்
ஆர்ப்பாட்டமான அழகெல்லாம் ஆயுள் வரை மனதில் நிலைப்பதில்லை.

இந்த பாடலும் எளிமையான அழகை தான் நம் கண் முன்னே கொண்டு வரும்.

தேவா என்ற இசையமைப்பாளரை இணைய வாசகர்கள் மறந்து வருகிறார்கள்
90 களில் அவர் பல அருமையான பாடல்களுக்கு மெட்டமைத்திருக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

ஜானகியின் குரல் 100% மெட்டோடு பொருந்தி பாடலின் உயிராகின்றது

திரும்பத் திரும்ப கேட்கத் தோன்றும் வரிகள்


“துள்ளி விழும் அருவியைப் போல்
உன்னுடைய பார்வை என் மேல் பட்டவுடன் பறந்து வானில் சிறகடிப்பதென்ன”


கண்டிப்பாக தனிமையில் கேட்க வேண்டிய பாடல்

தலைவனை நினைத்து ஏங்கும் பெண் ஜானகி அவர்களின் குரலில் இதோ



தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்
எனை வாட்டும் பூ மனம் இங்கு வாழ்த்துதே தினம்

தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்
எனை வாட்டும் பூ மனம் இங்கு வாழ்த்துதே தினம்
தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்

மாலையிட்டு பூ முடித்து மஞ்சளிட்டு நான் குளித்து
மன்னவனைத் தேடித் தேடி நான் மயங்குகிறேன்
தேரில் வரும் போதும் சுகம் தென்றல் தரும் நாதம் சுகம்
தெய்வத்திற்கு நன்றி சொல்லி நான் வணங்குகிறேன்
மஞ்சளோடு குங்குமமும் மன்னவனின் பூஜைக்கென்றுநான் படைத்தேன்
உயிரிலே உறவிலே கலந்து வாழ்கிறேன்
நான் நினைத்து பார்க்கிறேன் உன் நிழலில் சாய்கிறேன்

தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்
எனை வாட்டும் பூ மனம் இங்கு வாழ்த்துதே தினம்
தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்

துள்ளி விழும் அருவியைப் போல்
உன்னுடைய பார்வை என் மேல் பட்டவுடன் பறந்து வானில் சிறகடிப்பதென்ன
என்னருகில் நீ இருந்து உன்னிரண்டு கண் மலர்ந்தால்
நெல்லின் மணி போல எந்தன் நிழல் தெரிவதென்ன
பெண்ணிலவு உன்னை எண்ணி வெண்ணிலவைப் போல இங்கு தேய்வதென்ன
தலைவனே தழுவ வா தனிமை வாட்டுது வா பருவம் ஏங்குது
முள்ளில் படுத்துத் தூங்குது

தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்
எனை வாட்டும் பூ மனம் இங்கு வாழ்த்துதே தினம்
தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்

படம்: என் ஆசை மச்சான்
இசை: தேவா
வரிகள்: வாலி
வெளியான வருடம்: 1996

பாடலை கேட்க இங்கே க்ளிக்கவும்


Thalaivanai-EnAsai...




free web hit counter image


Wednesday, September 5, 2007

மாமர கிளியே உன்ன இன்னும் நா மறக்கலயே

மாமரம், கிளி, மாசு இல்லா மனம் கொண்ட மக்கள் இவை யாவும் கிராமத்திற்கே உரித்தானது
ஜானகியின் துள்ளல் நிறைந்த குரலில் ஒரு கிராமத்து பெண்ணின் காதல் வெளிப்படும் அழகை பாருங்கள்.


திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டும் இந்த பாடலின் இரண்டு வரிகள்

" அட டட மம்முதங்கணையே
வந்து வந்து மயக்குது எனையே "

மயக்கும் குரலில் இதோ பாடல்


அட டட மாமர கிளியே
உன்ன இன்னும் நா மறக்கலயே

அட டட மாமர கிளியே
உன்ன இன்னும் நா மறக்கலயே
ரண்டு நாளா உன்ன எண்ணி பச்சத் தண்ணிக் குடிக்கலயே
அட டட மாமர கிளியே ஏ......ஏ

உன்ன நினைச்சே மஞ்சளரச்சேன்
மாசக் கணக்கா பூசிக் குளிச்சேன்
அட என்னாட்டம் ராசாத்தி எவ இருக்கா சொல்லு
உன்ன நினைச்சே மஞ்சளரச்சேன்
மாசக் கணக்கா பூசிக் குளிச்சேன்
அட என்னாட்டம் ராசாத்தி எவ இருக்கா சொல்லு
அட டட மாதுளங்கனியே இதை இன்னும் நீ நினைக்கலயே
கிட்ட வாயேன் கொத்தி போயேன்
உன்ன நா தடுக்கலயே மறுக்கலயே

அட டட மாமர கிளியே
உன்ன இன்னும் நா மறக்கலயே
ரண்டு நாளா உன்ன எண்ணி பச்சத் தண்ணிக் குடிக்கலயே
அட டட மாமர கிளியே

உப்பக் கலந்தா கஞ்சி இனிக்கும்
உன்னக் கலந்தா நெஞ்சு இனிக்கும்
அட பரிசந்தா போட்டாச்சு பாக்கு மாத்தியாச்சு
உப்பக் கலந்தா கஞ்சி இனிக்கும்
உன்னக் கலந்தா நெஞ்சு இனிக்கும்
அட பரிசந்தா போட்டாச்சு பாக்கு மாத்தியாச்சு
அட டட தாமரை கொடியே இது
உன் தோள் தொடரலியே
செல்லக் கண்ணு சின்னப் பொண்ணு இத
நீ நினைக்கலயே அணைக்கலயே

அட டட மாமர கிளியே
உன்ன இன்னும் நா மறக்கலயே
ரண்டு நாளா உன்ன எண்ணி பச்சத் தண்ணிக் குடிக்கலயே
அட டட மாமர கிளியே..

தந்தே நத்த தந்தே நா நா
தந்தீ நா தீநந்தாநா
நந்தா நா
தந்தீந தீநந்திந தாநா

மீன புடிக்க தூண்டிருக்கு
நீரைப் புடிக்க தொண்டியிருக்கு
அட உன்னத் தான் நா புடிக்க
கண் வலையப் போட்டேன்
அட டட மம்முதங்கணையே
வந்து வந்து மயக்குது எனையே
இந்த ஏக்கம் ஏது தூக்கம்
பாய போட்டு படுக்கலயே புடிக்கலயே


அட டட மாமர கிளியே
உன்ன இன்னும் நா மறக்கலயே
ரண்டு நாளா உன்ன எண்ணி பச்சத் தண்ணிக் குடிக்கலயே
அட டட மாமர கிளியே ஏ...ஏ


படம்
: சிட்டுக் குருவி
இசை: இசைஞானி
பாடல்: வாலி
வெளியான ஆண்டு: 1978

பாடலை கேட்க இங்கே க்ளிக்கவும்

Chittukuruvi-ADADA...





free web hit counter image