Wednesday, September 5, 2007

மாமர கிளியே உன்ன இன்னும் நா மறக்கலயே

மாமரம், கிளி, மாசு இல்லா மனம் கொண்ட மக்கள் இவை யாவும் கிராமத்திற்கே உரித்தானது
ஜானகியின் துள்ளல் நிறைந்த குரலில் ஒரு கிராமத்து பெண்ணின் காதல் வெளிப்படும் அழகை பாருங்கள்.


திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டும் இந்த பாடலின் இரண்டு வரிகள்

" அட டட மம்முதங்கணையே
வந்து வந்து மயக்குது எனையே "

மயக்கும் குரலில் இதோ பாடல்


அட டட மாமர கிளியே
உன்ன இன்னும் நா மறக்கலயே

அட டட மாமர கிளியே
உன்ன இன்னும் நா மறக்கலயே
ரண்டு நாளா உன்ன எண்ணி பச்சத் தண்ணிக் குடிக்கலயே
அட டட மாமர கிளியே ஏ......ஏ

உன்ன நினைச்சே மஞ்சளரச்சேன்
மாசக் கணக்கா பூசிக் குளிச்சேன்
அட என்னாட்டம் ராசாத்தி எவ இருக்கா சொல்லு
உன்ன நினைச்சே மஞ்சளரச்சேன்
மாசக் கணக்கா பூசிக் குளிச்சேன்
அட என்னாட்டம் ராசாத்தி எவ இருக்கா சொல்லு
அட டட மாதுளங்கனியே இதை இன்னும் நீ நினைக்கலயே
கிட்ட வாயேன் கொத்தி போயேன்
உன்ன நா தடுக்கலயே மறுக்கலயே

அட டட மாமர கிளியே
உன்ன இன்னும் நா மறக்கலயே
ரண்டு நாளா உன்ன எண்ணி பச்சத் தண்ணிக் குடிக்கலயே
அட டட மாமர கிளியே

உப்பக் கலந்தா கஞ்சி இனிக்கும்
உன்னக் கலந்தா நெஞ்சு இனிக்கும்
அட பரிசந்தா போட்டாச்சு பாக்கு மாத்தியாச்சு
உப்பக் கலந்தா கஞ்சி இனிக்கும்
உன்னக் கலந்தா நெஞ்சு இனிக்கும்
அட பரிசந்தா போட்டாச்சு பாக்கு மாத்தியாச்சு
அட டட தாமரை கொடியே இது
உன் தோள் தொடரலியே
செல்லக் கண்ணு சின்னப் பொண்ணு இத
நீ நினைக்கலயே அணைக்கலயே

அட டட மாமர கிளியே
உன்ன இன்னும் நா மறக்கலயே
ரண்டு நாளா உன்ன எண்ணி பச்சத் தண்ணிக் குடிக்கலயே
அட டட மாமர கிளியே..

தந்தே நத்த தந்தே நா நா
தந்தீ நா தீநந்தாநா
நந்தா நா
தந்தீந தீநந்திந தாநா

மீன புடிக்க தூண்டிருக்கு
நீரைப் புடிக்க தொண்டியிருக்கு
அட உன்னத் தான் நா புடிக்க
கண் வலையப் போட்டேன்
அட டட மம்முதங்கணையே
வந்து வந்து மயக்குது எனையே
இந்த ஏக்கம் ஏது தூக்கம்
பாய போட்டு படுக்கலயே புடிக்கலயே


அட டட மாமர கிளியே
உன்ன இன்னும் நா மறக்கலயே
ரண்டு நாளா உன்ன எண்ணி பச்சத் தண்ணிக் குடிக்கலயே
அட டட மாமர கிளியே ஏ...ஏ


படம்
: சிட்டுக் குருவி
இசை: இசைஞானி
பாடல்: வாலி
வெளியான ஆண்டு: 1978

பாடலை கேட்க இங்கே க்ளிக்கவும்

Chittukuruvi-ADADA...





free web hit counter image


6 comments:

Anonymous said...

Dear sharan,
THanks for your picks. ADada mamarakiliyae - Excellent composition .

Sj in voice -IR in composing ai purindhu kondu,miga azhagaga, Thannudaiya idathai, INIMAIYANA and INTELLGENT ana VOICE al Fill pannum oru Great Singer.......

Oru chinna request - Adikadi padalgal podavum.Padalai host pannum GAP - Rombavae adhigam.Pl adikadi padalai host pannungo...
With Love,
Usha Sankar.

ஸ்ரீ சரவணகுமார் said...

உஷா
மிகபெரிய இடைவெளி தான்
மன்னிக்கவும்
இனிவரும் நாட்களில் இது போன்று நடக்காது

Anonymous said...

ஹாய் ஸ்ரீசரண்

எப்படி இருக்கீங்க சார். இதோ நம் அபிமான பாடகி ஜானகியம்மாவின் மற்றுமொடு தளம்.

http://janakiamma.blogspot.com/

சார் உங்களை கேக்காமாலே உங்கள் தளத்தின் சுட்டி கொடுத்துள்ளேன். தவறாயிருப்பின் மன்னிக்கவும். இரண்டு பேரும் பாடல்கள் சரிபார்த்துக்கொள்ள ஏதுவாக இருக்கும். அருமையான பாடல்கள் இட்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

Anonymous said...

உஷா சங்கர் மேடம் நலமா?
http://janakiamma.blogspot.com/
இந்த பக்கம் கொஞ்சம் வாங்க மேடம்.

Anonymous said...

Dear Ravi,
Thanks for the link.Innum parkalai.Parakren...

Dear Sharan,
Padal pdoara idea iruka????

With Love,
Usha Sankar.

ஸ்ரீ சரவணகுமார் said...

உஷா பாடல் போட்டாச்சு